IMF இன் அனுமதி மகிழ்ச்சி அளிக்கின்றது!
சுமார் 336 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக நிதிராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
IMF இன் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது மீளாய்வுக்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளமை குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது மீளாய்வுக்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது.
இதனூடாக 336 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்தொகை எமக்கு கிடைக்கப்பெறும். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில் எமது இலக்கு மட்டத்தை நாம் அடைந்ததை சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொண்டது.
இந்த மாதம் மே மாதமளவில் பணவீக்கம் மேலும் குறைந்த மட்டத்தில் பேணப்பட்டமை ஆகியனவும் கருத்திற்கொள்ளப்பட்டன.
எனவே சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து மூன்றாவது தவணை நிதி கிடைக்கப்பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை” இவ்வாறு தெரிவித்துள்ளார்.