உணவகங்கள் எடுத்துள்ள முடிவு !
08.07.2022 00:05:00
அரசாங்கத்திற்கு எதிரான பாரிய மக்கள் போராட்டம்
கொழும்பில் நாளை மறுதினம் 9ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு எதிரான பாரிய மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து உணவு விற்பனை நிலையங்களும் அன்றைய தினம் மூடப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
உணவகங்கள் எடுத்துள்ள முடிவு
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நாளை மறுதினம் கொழும்பில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அந்த சம்மேளனத்தின் தலைவர் அசேல சம்பத் இதனை அறிவித்துள்ளார்.