சிவகரனிடம் ரிஐடி இரண்டரை மணிநேர வாக்குமூலம்!

08.12.2021 05:46:17

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனிடம் சுமார் இரண்டரை மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. வவுனியா பயங்கரவாத விசாரணை பிரிவினரால் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாவீரர் தின நிகழ்வுகள், சிவில் சமூக செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவரிடம் பயங்கரவாத விசாரணை பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.