நோயாளர் காவுவண்டியின் சாரதியை துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

02.02.2022 07:43:59

பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் நோயாளர் காவுவண்டியின் சாரதி ஒருவருக்கு துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரில் ஒருவரும் அவருடன் தங்கியிருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேகநபர் பாணந்துறை அருக்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்.இவர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த வழக்கின் பிரதான சந்தேக நபர் பாணந்துறை, வாலான பகுதியைச் சேர்ந்த ‘சிம் மல்லி’ எனப்படும் பிரமோத் சந்தகெலும் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் அவரை தேடும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக  பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.