இப்பொழுதும் சுதந்திர கட்சி எமது கைகளிலேயே

29.12.2022 19:46:54

சிறிலங்கா சுதந்திரக் கட்சி தமது அணியினரின் கைகளிலேயே இருக்கின்றது என சிறிலங்கா அமைச்சர் ஒருவர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.

டிசம்பர் 31 கதிர்காமம் கிரிவெஹர தினத்தை முன்னிட்டு சுதந்திரக் கட்சி 60 ஆவது தடவையாக நடத்தும் பௌத்த சமய நிகழ்வு தொடர்பில் அறிவிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மகிந்த அமரவீர பதில் 

ஊடகவியலாளர் ஒருவர், சிறிலங்கா சுதந்திர கட்சியின் சமய நிகழ்வுகளை ஒரு குழுவொன்று ஆக்கிரமித்துள்ளதாக, சுதந்திரக் கட்சியின் தற்போதைய செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர வெளியிட்ட கருத்துத் தொடர்பில் கேள்வியெழுப்பிய போதே விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

சிறிலங்கா சுதந்திரக் கட்சி பலகையிலோ அல்லது டாலி வீதியில் உள்ள கட்டிடத்திலோ அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

துமிந்த கருத்து

மேலும் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, இலங்கை தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் இவ்விடயத்தை ஏற்றுக்கொண்டுள்ளமை நல்ல விடயமாகும் எனத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.