முன்னாள் எஸ் எஸ் பி கே. அரசரட்ணம் காலமானார்

30.12.2021 06:50:40

முன்னாள் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரும், தமிழ் நகைச்சுவை பேச்சாளருமான கே. அரசரட்ணம் தமது 70 ஆவது வயதில் நேற்று காலமானார்

காவல்துறையில் சிறந்த சேவையினை வழங்கிய அவர், ஈழத்து தமிழ் செயற்பாட்டுத் துறையில் முக்கிய பங்கினை வகித்து வந்தார்.

பிற்காலத்தில், காவல்துறை பொதுமக்கள் ஒருங்கிணைப்பு பணிகளுக்காக அவர், இணைக்கப்பட்டிருந்தார்.

அவரது இறுதிக்கிரியை எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.