500 கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனாவால் பாதிப்பு

01.02.2022 05:16:56

இலங்கையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொவிட் தொற்று உறுதியாகின்றமை தற்போது அதிகரித்துள்ளதாக குடும்ப சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இதுவரை 500 கர்ப்பிணித் தாய்மார்கள் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் சித்ரமாலி டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.