ரணில் -ராஜபக்சாக்கள் இடையே இரகசிய ஒப்பந்தம் - மேர்வின்

09.09.2022 11:04:00

புதைகுழியைச் சூழ்ந்துள்ள போர்வீரன் 

அதிபர் ரணில் விக்கிரமசிங்க புதைகுழியைச் சூழ்ந்துள்ள போர்வீரன் போன்றவர் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

திறமையான அரசியல்வாதியான ரணில் விக்கிரமசிங்க தற்போது கைப்பாவையாக மாறியுள்ளதாக கூறும் மேர்வின் சில்வா, கலியுகத்தை நிறைவு செய்து கற்காலத்தை உருவாக்கியதை சுட்டிக்காட்டுகிறார்.

ரணில் -ராஜபக்சாக்கள் இரகசிய ஒப்பந்தம்

 

ரணில் விக்கிரமசிங்கவை கல் தூண்கள் சூழ்ந்துள்ளதால் இவ்வாறு கூறுவதாகக் கூறும் சில்வா, ராஜபக்சாக்களுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சாக்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்காமல் ரணில் விக்ரமசிங்க அதிபர் பதவியில் இருந்து விலகினால் எதிர்வரும் அதிபர் தேர்தலில் மக்கள் நிச்சயம் ரணில் விக்கிரமசிங்கவை அதிபராக தெரிவு செய்வார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.