அதிபர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்

28.01.2022 06:54:44

பல கோரிக்கைகளை முன்வைத்து, சுகயீன விடுமுறையை பதிவு செய்யும் நோக்கில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு அதிபர்கள் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட 11 அதிபர்கள் சங்கங்களில் இருந்து 11,000 அதிபர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அதிபர்கள் கூட்டணியின் உறுப்பினர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்துள்ளார்.