இலங்கை சிறையில் இருந்து 13 தமிழக மீனவர்கள் விடுவிப்பு

05.01.2022 12:15:20

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேரை விடுவித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 43 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். இதேபோல், புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களை, படகுகளுடன் அடுத்தடுத்த நாட்களில் சிறைப்பிடித்துச் சென்றனர். மொத்தம் 68 தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்தை முதல்வர் ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வலியுறுத்தினர். இந்நிலையில், மன்னார் நீதிமன்றம் இன்று, ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை சேர்ந்த 13 மீனவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.