சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை முன்வையுங்கள்

09.03.2022 09:57:24

இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார்.

இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே குறித்த கோரிக்கைய அவர் விடுத்திருந்தார்.

மேலும் நிதி அமைச்சும் மத்திய வங்கியும் வெளிநாட்டு கையிருப்பு தொடர்பான தரவுகள் உட்பட அரச நிதி தொடர்பான அனைத்து உண்மைகளையும் முன்வைக்க வேண்டும் என்றார்.

இந்த விவரங்களின் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தி, நிலவும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு சர்வகட்சி மாநாடு நடத்தப்படுமாயின் அரசாங்கத்தின் நிதி தொடர்பான விபரங்கள் அவர்களிடம் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.