முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி

10.01.2023 22:03:10

இலங்கை அணியுடனான முதலாவது சர்வதேச ஒரு நாள் துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணி 67 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 ஆட்டமிழப்புகளை சந்தித்து 373 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி வெற்றி

இந்திய அணி சார்பில் விராட் கோலி 113 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 83 ஓட்டங்களையும் அதிகூடிய ஓட்டங்களாக பெற்றுக் கொடுத்தனர்.

374 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 ஆட்டமிழப்புகளை சந்தித்து 306 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் தசுன் ஷானக்க ஆட்டமிழக்காது 108 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 47 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதன்படி, இந்திய அணி முதலாவது ஆட்டத்தில் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.