புகையிரதங்களில் மோதி இருவர் மரணம்
20.11.2021 10:36:02
இரு ரயில்களில் மோதுண்டு இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்
பொல்கஹவெல அலவ்வ ரயில் நிலையத்துக்கு அருகில், கொழும்பிலிருந்த பயணித்த ரயிலில் மோதுண்டு நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார் என்று பொல்கஹவெல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவரின் பெயர் விவரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
அதேவேளை, கொழும்பு பிரதான ரயில் மார்க்கத்துக்கு அருகில் கொழும்பிலிருந்து சென்ற ரயிலில் மோதுண்டு நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார்
நிவித்திகல பிரதேசத்தை சேர்ந்த 19 வயது நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.