இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகம்.

01.07.2026 15:08:47

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி ஜே. ஜி. எல். எஸ். ஜயவர்தன, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டார்.

இதற்கான நியமனக் கடிதத்தை, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இன்று பிற்பகல் (01) ஜனாதிபதி அலுவலகத்தில் கலாநிதி ஜே. ஜி. எல். எஸ். ஜயவர்தனவிடம் கையளித்தார்.

கலாநிதி ஜே. ஜி. எல். எஸ். ஜயவர்தன, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் நாயகமாகவும் ( நிறுவன விவகாரங்கள்) பணியாற்றி வருகிறார்.