மனைவி தாக்கியதால் கணவன் மரணம்

25.12.2021 08:18:54

நுவரெலியா பீட்ரு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலைசெய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 44 வயதுடைய  மூன்று  பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட முரண்பாடு முற்றியதாலேயே கணவனை அடித்து மனைவி கொலை செய்திருக்கலாம் என பிரதேச மக்கள் காவற்துறையினரிடம் தெரிவிக்கின்றன. 

காரணம் மனைவிற்கும் வேறு ஒரு நபருக்கும் இடையே உள்ள கள்ள  காதல் விவகாரம் அம்பலமாகியதால் கணவன் மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி கணவனை பொல்லால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இந்நிலையில், குடும்பஸ்தரின் உடலில் 5 இற்கும் மேற்பட்ட காயங்கள் காணப்படுவதாக காவற்துறையினர் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவற்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.