ஊழல் அரசியலுக்கு இனி நாட்டில் இடமில்லை!
14.09.2026 08:24:42
|
நாட்டில் பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியலில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் காணப்பட்ட ஊழல் நிறைந்த அரசியலுக்கு இனி நாட்டில் மீண்டும் ஒருபோதும் இடம் கிடைக்காது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். |
|
"எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் - நாட்டிற்குச் சுபிட்சம்" என்ற கருப்பொருளின் கீழ் மாவட்ட மட்டத்தில் நடத்தப்படும் மக்கள் பேரணித் தொடரில், கஹட்டகஸ்திகிலிய நகரில் இன்று பிற்பகல் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, ஊழல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். |