இந்திய உயரதிகாரியுடன் கிழக்கு ஆளுநர் முக்கிய கலந்துரையாடல்!

19.01.2026 14:28:31

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் அசோக் குமார் ஆர். மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கு இடையே இன்று திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது.

இந்திய உதவித் தொகையான 2.3 பில்லியன் ரூபாயின் கீழ் கிழக்கு மாகாணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய நிலை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் இடங்களைக் கண்காணிப்பது தொடர்பாக தாம் திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

ஆரம்ப கட்டத்தில் இந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு வழங்கப்பட்ட ஆதரவுக்கு ஆளுநர் முதல் செயலாளருக்கு சிறப்பு நன்றி தெரிவித்தார்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் இந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்த தனது குழு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படும் எனவும் உறுதியளித்தார்.