கனடாவில் இலங்கை தமிழருக்கு விதிக்கப்பட்ட பதினேழரை வருட சிறை
26.01.2023 00:03:00
கனடாவில் தமிழர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட இலங்கைத் தமிழருக்கு பதினேழரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
2 குற்றச்சாட்டுக்கள் பதிவு
இந்த வழக்கில் சந்தேக நபருக்கு எதிராக 2 குற்றச்சாட்டுக்கள் பதிவாகியிருந்தன. அதன்படி படுகொலை குற்றச்சாட்டில் பதினொன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும், கொலை செய்ய துப்பாக்கியை பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காக 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனைக்கு முன்னர் 5 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் , மேலும் ஆறரை ஆண்டுகள் சிறை வைக்கப்படவுள்ளார்.
நாடு கடத்தப்படுவார்
அதேவேளை சந்தேகநபர் கனேடிய பிரஜாவுரிமை கொண்டவர் இல்லை என்பதனால் , தண்டனைக்காலம் முடிந்ததும் அவர் நாடு கடத்தப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.