தொழிலாளர்களுக்கும் 5,000 ரூபா நிவாரணம் வழங்கப்பட வேண்டும் – பழனி திகாம்பரம்
07.01.2022 06:37:28
அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா நிவாரணம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவுக்கான நிவாரணமாக மலையக மக்களுக்கு 600 ரூபா மாத்திரமே அரசாங்கம் வழங்குவது ஏற்புடையதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.