புதிய கூட்டணியில் தேர்தல் வேட்டைக்குத் தயாராகும் அணி

13.01.2023 21:13:26

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.

மான் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இரு தரப்பும் தீர்மானித்துள்ளதாகவும் அறிய முடிகிறது. விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இன்றைய தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் இருந்து இடை நடுவில் வெளியேறினர்.

இந்நிலையிலேயே விக்னேஷ்வரன் மற்றும் மணிவண்ணன் அணி இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.

தமிழ்த்தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

கலந்துரையாடல்

கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், வி.மணிவண்ணன், குருசாமி சுரேந்திரன், வி.பி.சிவநாதன், வ.பார்த்தீபன், வேந்தன், துளசி, உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.