புதிய அமைச்சர்கள் நியமனம்!

04.04.2022 15:57:18

அமைச்சர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் கையளித்துள்ள நிலையில், இன்று (திங்கட்கிழமை) புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி பசில் ராஜபக்ஷவுக்கு பதிலாக புதிய நிதி அமைச்சராக அலி சப்ரி பதவியேற்றுள்ளார்.

அத்தோடு, கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தன சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

மேலும் வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸும்
நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

குறித்த நால்வரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

கடுமையான அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில் முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய அமைச்சர்கள் நியமனம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.