தமிழரசுக் கட்சியில் தனி மனித சர்வாதிகாரம்!
03.11.2024 13:35:24
தமிழரசுக் கட்சியில் தனி மனித சர்வாதிகாரம் மட்டுமே இருக்கின்றதே ஒழிய ஜனநாயகம் இல்லை என சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். |
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “தமிழர்களின் பிரச்சினைகளை நாம் ஒன்றாக கலந்துரையாடி தென்னிலங்கை அரசாங்கத்திடம் முன்வைக்க வேண்டும். எனினும், நமது தமிழ் அரசியல்வாதிகள் தென்னிலங்கை அரசுக்கு எது சார்பாக இருக்கின்றதோ அதையே செய்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். |