பதவி விலகல் தொடரில் தம்மிக்க பெரேரா
21.07.2022 10:26:12
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக தம்மிக்க பெரேரா அறிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தின் விசுவாசியும் நெருங்கிய நண்பருமான தம்மிக்க பெரேரா முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்கு தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான தம்மிக்க பெரேராவை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நியமித்தார் கோட்டாபய ராஜபக்ச.
அமைச்சராக இருந்த காலத்தில் ரணில் விக்ரமசிங்கவிடம் சரியான கொள்கைகள் இல்ல அவர் நிதியமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அறிவித்தல் விடுத்திருந்தார்
இருப்பினும், நாட்டில் ஏற்பட்ட பாரிய நெருக்கடியையடுத்து, தமது அமைச்சுப் பதவியிலிருந்து தம்மிக்க பெரேரா விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.