“ராஜபக்ஷ அணி வந்தால்: நாங்கள் வெளியேறுவோம்“
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வழிநடத்தல் குழுவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ராஜபக்ச அணி தொடர்ந்தும் பங்குபற்றினால், அதில் இருந்து விலகி தமது கட்சி தனித்து நிற்கும் என ஜனாதிபதி ரணில் விக்ர மசிங்கவிற்கு அறிவிக்க பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா உள்ளிட்ட குழுவினர் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ராஜபக்ச முகாமின் ஆதரவு தேவையா அல்லது தனது சொந்த அணியினரின் ஆதரவு தேவையா என்பதை ஜனாதிபதியே தெரிவு செய்ய வேண்டும் என்றும் அக்குழுவினர் தெரிவித்ததுள்ளனர்.
ஜனாதிபதியின் தேர்தல் வழிநடத்தல் குழுவிற்கு திரு பசில் ராஜபக்ஷவை அழைத்தமைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள குழுவினர், அதனையும் மீறி அவர் தொடர்ந்தும் பங்குபற்றுவதாக அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா தரப்பினரும் நிமல் லன்சா மற்றும் குழுவினருடன் இணைந்து செயற்படுவதால், இந்தக் கருத்தை எதிர்காலத்தில் ஜனாதிபதிக்கு அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அறியமுடிகின்றது.