தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்திய தூதர் திடீர் சந்திப்பு
04.11.2021 05:02:04
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கும் இந்திய தூதரிற்குமிடையிலான சந்திப்பு, எதிர்வரும் 9ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அண்மையில் இந்திய தூதர் கோபால் பாக்ளேயுடனான சந்திப்பின் போது, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை, இரா.சம்பந்தன் கோரியிருந்தார்.
இதனடிப்படையில் 9ஆம் திகதி சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்திய தூதரை சந்தித்த போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து தருமாறு கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.