பேதங்களைக் கடந்து பயணிக்கத் தயார் - புதிய பிரதமர் !

22.07.2022 11:36:45

சிறிலங்காவின் அதிபர்  ரணில் விக்ரமசிங்க, நாட்டின் அரசமைப்பை விரைவில் மாற்றவுள்ளாக அறிவித்துள்ளார் என புதிய பிரதமரான தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

மேலும் நாம் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்பது, இதற்கு முன்னர் ஒருபோதும் சந்தித்திராத ஒன்றாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமராக பதவியேற்றத்தைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

 

அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நாம் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறோம்.

சர்வதேச நாடுகளுடன் கலந்தாலோசனை

மேலும் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க அரசியல் பேதங்களைக் கடந்து செயற்படத் தயார் எனவும் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.

அத்துடன் இன்று நாம் அமைச்சரவையை நியமித்த பின்னர், நாம் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்களுடன் கலந்தாலோசிக்கவுள்ளோம்.

அதேவேளை எமது பயணத்தை மீண்டும் சக்திமிக்கதாக மாற்ற நாம் நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு

அதுமட்டுமன்றி மக்களின் கோரிக்கைள் அனைத்தையும் கருத்திற்கொண்டே நாம் இந்த செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். 

நாட்டில் எரிவாயு மற்றும் உரப் பிரச்சினை இருந்தது. தற்போது இவற்றை நாம் நிவர்த்தி செய்துள்ளோம். அதேபோன்று, எரிபொருள் பிரச்சினை உள்ளது.

இதனையும் விரைவில் நிவர்த்தி செய்வோம். எமக்கிடையில் அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டின் எதிர்க்காலத்தை கருத்தில் கொண்டு, அரசியல் பேதமின்றி செயற்பட தயாராகவே உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.