எரிவாயு ​அடுப்பு வெடித்து தீக்கிரையான வீடு

07.01.2022 05:10:06

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தரவான் கோட்டை பகுதியில்,  கூலித் தொழிலில் ஈடுபடும் பெண்ணொருவரின் வீட்டில்,  மதியம் எரிவாயு ​அடுப்பொன்று வெடித்துள்ளது.

இதனால், அவ்வீடு முற்றுமுழுதாக எரிந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிராம மக்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும், வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளது.

மன்னார் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , நகர சபை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.