மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு தடை
16.01.2022 05:16:15
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை குறித்த மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்த எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை குறித்த மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்தவும் எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படும் என பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.