2027 வரவு –செலவுத் திட்டத்தில் பெருமளவு வரிகள் குறைக்கப்படும்!
|
2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக பெருமளவிலான வரிகள் குறைக்கப்படும். சர்வதேச நாணய நிதியத்தின் சாதகமான ஒத்துழைப்பை தொடர்ச்சியாக பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளோம் என நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். |
|
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது. அத்துடன் நாட்டின் நிதி ஒழுக்கமும் பாதுகாக்கப்பட்டுள்ளது. நாணய நிதியத்தின் செயற்திட்ட பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக பெருமளவிலான வரிகள் குறைக்கப்படும். குறிப்பாக வெற் வரி, உழைக்கும் போது செலுத்தப்படும் வரிகள் கட்டம் கட்டமாக குறைக்கப்படும். அதற்குரிய யோசனைகள் வரவுசெலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும். சர்வதேச நாணய நிதியத்தின் சாதகமான ஒத்துழைப்பை தொடர்ச்சியாக பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.நாணய நிதிய செயற்திட்டம் குறித்து எதிர்மறையான கருத்துக்களை குறிப்பிடுவதை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். குறுகிய அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்தி பொருளாதார காரணிகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது. நிறைவடைந்த 2 ஆண்டுகால பகுதியில் அரசியல் ரீதியில் பிரபல்யமடையும் வகையிலான தீர்மானங்களை அரசாங்கம் எடுக்கவில்லை. பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்திக்கொண்டு அரச நிர்வாகத்தை முன்னெடுத்துள்ளோம். பொருளாதாரத்துக்கு பாதிப்பு செலுத்தும் எவ்விதமான தீர்மானங்களையும் எடுக்க போவதில்லை என்றார். |