கோட்டாபயவை மாலைத்தீவிலும் விரட்டியடிக்கும் மக்கள்!
13.07.2022 09:59:29
இன்று அதிகாலை மாலைத்தீவுக்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது தீவு ஒன்றிற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் தரையிறங்கியவுடன் விமான நிலையத்தில் இருந்த இலங்கை மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கோட்டபாயவை கடுமையாக திட்டும் வகையிலான காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் தனித்தீவு ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.