நிதிநெருக்கடியில் அரச நிறுவனம்

22.11.2021 16:20:46

 

சுமார் 7 பில்லியன் ரூபா நிலுவைத் தொகையை நுகர்வோர் செலுத்த வேண்டியுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மின்சார கட்டணம் மற்றும் குளோரின் விலை அதிகரிப்பு காரணமாக சபையின் நாளாந்த செலவுகள் அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் நிஷாந்த ரணதுங்க(Nishantha Ranatunga) சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது பயன்படுத்தப்படாத சபையின் காணிகளை விற்று வருமானம் ஈட்டலாம் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நீர் பாவனையாளர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்குவதற்காக, கொரோனாவின் விரிவாக்கம் மற்றும் மக்களின் வருமான ஆதாரங்கள் தடைப்பட்டதன் காரணமாக நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேராதனையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.