வவுனியா பல்கலைக் கழகத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி

13.02.2022 11:20:44

வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடம் மற்றும் பல்கலைக்கழக கல்வெட்டு என்பவற்றை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் நேற்று  அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.  

இலங்கையின் 17 ஆவது பல்கலைக்கழகமாக கடந்த ஓகஸ்ட் மாத்தில் இருந்து செயற்பட தொடங்கிய வவுனியா பல்கலைக் கழகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.


இதில் அதிதியாக கலந்து கொண்ட இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பல்கலைக்கழக பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டினை அங்குரார்ப்பணம் செய்து வைத்ததுடன், பல்கலைக்கழத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மண்டபத்தினையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கு.திலீபன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.