தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை.

07.10.2026 09:03:00

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 8 சந்தேகநபர்களுக்கு எதிராக இன்று (07) மாத்தறை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டுள்ளன.

தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 8 சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். குறித்த வழக்கு மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி நந்தன அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, 8 சந்தேகநபர்களையும் தலா 250,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான நான்கு தனிப்பட்ட பிணைப் பத்திரங்களிலும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நான்கு பிணையாளர்களில் இருவர் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் பிணை நிபந்தனை விதித்துள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்து வரும் நிலையில், வழக்கு எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.