ட்ரோன் கமரா பயன்படுத்திய ரஷ்ய பிரஜை கைது
31.01.2022 12:31:25
மிரிஸ்ஸ கடற்கரை பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் கமராவை இயக்கிய குற்றச்சாட்டுக்காக ரஷ்ய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், விடுமுறைக்காக இலங்கைக்கு வந்திருந்த ரஷ்ய புகைப்படக் கலைஞர் என்பதுடன் மிரிஸ்ஸ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இலங்கையில் அனுமதியின்றி ட்ரோன் கமராக்களை பயன்படுத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.