யாழ், மட்டு மாவட்டங்களுக்கு புதிய அரச அதிபர்கள் நியமனம்!
17.01.2023 15:27:16
இலங்கையின் மிக முக்கியமான இரண்டு தமிழ் நிர்வாக மாவட்டங்களுக்கு புதிய அரசாங்க அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு புதிய அரசாங்க அதிபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன இதற்கான நியமனக்கடிதங்களை இன்றைய தினம் வழங்கி வைத்துள்ளார்.
புதிய அரச அதிபர்கள்
யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக பணியாற்றிய அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக மீண்டும் கலாமதி பத்மராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக பணியாற்றியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.