முன்னணிக் கலைஞர் லக்ஷ்மன் விஜேசேகர காலமானார்
13.11.2021 06:52:15
இலங்கையின் முன்னணிக் கலைஞர் லக்ஷ்மன் விஜேசேகர உடல் நல குறைவினால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 73 ஆவது வயதில் நேற்று காலமானார்.
இசையமைப்பாளராக, நாடக ஆசிரியராக, படைப்பாளியாக நாட்டின் கலைத் துறையை வளர்த்தெடுக்க லக்ஷ்மன் விஜேசேகர இதயப்பூர்வமாக பாடுபட்டுள்ளார்.
பல தசாப்தங்களாக ஒரு மனிதாபிமான கலைஞராக தனது பங்கை வெளிப்படுத்திய அவர், நூறாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் அவரது ஒரு சில படைப்புகளை என்றென்றும் பதிய வைத்துள்ளார்.
அவரது பூதவுடல் இன்று (13) பொதுமக்களின் அஞ்சலிக்காக கல்கிசையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, இறுதிக் கிரியைகள் நாளை (14) கல்கிசை பொது மயானத்தில் இடம்பெறும்.