ஆணைக்குழுக்கள் குறித்து ரணில் இன்று விசேட அறிக்கை!
23.10.2024 08:25:20
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக தான் நியமித்த இரு குழுக்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். |
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில திங்கட்கிழமை விடுத்த அறிக்கையை தொடர்ந்தே ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றை வெளியிட தீர்மானித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி நியமித்த இரு குழுக்களும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவிசெனிவிரட்ண மற்றும் சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபயசேகர ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்ததாக உதயகம்மன்பில தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை அரசாங்கமும் கத்தோலிக்க திருச்சபையும் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. |