இலங்கை வந்தவருக்கு ஒமிக்ரோன் தொற்று!

11.01.2022 07:02:16

வெளிநாடொன்றில் இருந்து இலங்கை வந்தவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி நாவலப்பிட்டி- புதிய திஸ்பனை சுகாதார வைத்திய அதிகாரி அ​லுவலகத்துக்குட்பட்ட பகுதியிலிருந்து ஒமிக்ரோன் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் இந்தியப் பிரஜை என்றும், இவர் இலங்கைப் பெண்ணொருவரை திருமணம் முடித்து ஹப்புகஸ்தலாவை பகுதியில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த நபர் அண்மையில் உகண்டாவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.