வெளிநாடு செல்லும் இலங்கையரா ?
07.12.2021 15:47:10
புலம்பெயர் பணியாளர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று ஹாலி - எல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அடுத்த வருடம் ஜனவரி முதல் இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் செல்லும் பணியாளர்களுக்கு பூரண பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்களுக்காக விசேட காப்புறுதித் திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது.
பெண்களை வீட்டுப் பணிப்பெண்ணாக வெளிநாடுகளுக்கு அனுப்புவது நிறுத்தப்பட வேண்டும், அதற்கு பதிலாக பயிற்றப்பட்ட பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக அனுப்புவதை ஊக்குவிக்க வேண்டும்” என்றார்.