2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளை பெற்று தவெக ஆட்சி அமைந்த பின் அதிமுகவிலிருந்து 7 எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அதில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில், தவெக வெற்றி பெற்றது. திமுக இரண்டாம் இடத்திற்கு செல்ல, அதிமுக மூன்றாம் இடத்திற்கு சென்றது..

தற்போது திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 5 தொகுதிகளும் காலியாக இருக்கிறது. ஆனால் இந்த 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தலில் நடத்தக்கூடாது ஏராளமான மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறையில் இடைத்தேர்தல் நடத்திக் கொள்ளலாம் என இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேநேரம், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகளுக்கு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இடைத்தேர்தல் நடத்த தடை நீடிக்கப்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம், பெருந்துறையில் இடைத்தேர்தல் நடத்திக்கொள்ளலாம் என உயர்நீதிமன்றம் கூறிவிட்டதால் எப்போது தேர்தல் என விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.