நாளை (29.11.2026) ஸ்பெயினில் முன்கூட்டிய பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அண்மைய கருத்துக் கணிப்புகளின்படி, இந்தத் தேர்தல் முடிவுகள் தற்போதைய சோசலிசக் கட்சியின் பிரதமர் பெட்ரோ சான்செஸின் ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் வலதுசாரிக் கட்சிகளின் கூட்டணி ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறான அரசியல் மாற்றம் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நிலவும் அதிகாரச் சமநிலையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இந்நிலையில், ஸ்பெயின் தேர்தல் தொடர்பான முக்கிய விவகாரங்கள் குறித்து ஆராயும் வகையில், ஸ்பெயின் தேசிய ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளரான ஜேவியர் மார்டினெஸ்-கான்டோவுடன் ஐரோப்பிய ஊடகமான Euronews கலந்துரையாடியுள்ளது.
இதன்போது, வீடமைப்பு மற்றும் குடியேற்றம் உள்ளிட்ட தேர்தல் பிரசாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ள விவகாரங்கள் குறித்தும், அவற்றுக்குத் தீர்வு காண்பதற்காக அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
மேலும், பெட்ரோ சான்செஸ் மீண்டும் ஆட்சியில் தொடரும் பட்சத்தில், அது ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு எத்தகைய அரசியல் சமிக்ஞையை வழங்கும் என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.