2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் ஆறாவது நாளான இன்று (28), பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் செலவுத் தலைப்புகள் (103, 222 முதல் 224, 304, 325) பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டன.
குழுநிலை விவாதத்தின் பின்னர் இன்று பிற்பகல் 6.20 மணியளவில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாதுகாப்பு அமைச்சின் 103ஆம் இலக்க செலவுத் தலைப்பு தொடர்பில் வாக்கெடுப்பொன்றைக் கோரினார்.
அதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அதற்கு ஆதரவாக 85 வாக்குகளும் எதிராக 04 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய, 81 மேலதிக வாக்குகளால் குறித்த (103) செலவுத் தலைப்பு நிறைவேற்றப்பட்டது.
அதேநேரம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் 225ஆம் இலக்க செலவுத் தலைப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதுடன், ஏனைய செலவுத் தலைப்புகள் (189, 226, 320) வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.