தீபாவளிக்கு 15,659 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

04.11.2026 14:25:54

 

பொதுவாகவே தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சென்னையிலிருந்து வெளியூருக்கு செல்லும் பொது மக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் இந்த தீபாவளிக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் தெரிவித்திருக்கிறார்.

செய்தியாளர்ளிடம் பேசிய அவர் தீபாவளி பண்டிகைக்காக தமிழ்நாடு முழுவதும் 15, 659 சிறப்பு பரிசுகள் இயக்கப்படும் என தெரிவித்தார். சென்னையில் இருந்து வருகிற 5ம் தேதி இரவு முதல் 7ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 6,573 சிறப்பு பேருந்துகள் சேர்த்து இயக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும் கேளம்பாக்கம் பேருந்து நிலையம் மட்டுமல்லாமல் கோயம்பேடு, மாதாவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவிருப்பதாக அவர் தெரிவித்தார்.