இன்று ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கான ஒப்புதல் வழங்குவது குறித்த தீர்மானம் !

31.03.2021 13:04:42

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி அளிப்பது குறித்த இறுதி தீர்மானம் இன்று (புதன்கிழமை) எடுக்கப்படவுள்ளது.

இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகளும், நோய் எதிர்ப்புத் திறன், பாதுகாப்பு உள்ளிட்ட விபரங்களும் நிபுணர் குழு முன்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவற்றை பரிசீலனை செய்ததன் பின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்குதல் குறித்து தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.