பிரதமர் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் !

12.05.2021 10:19:20

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (புதன்கிழமை) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

காலை 11 மணி அளவில் ஆரம்பமாகவுள்ள இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், ஒக்சிஜன் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.