முன்னாள் முதல்வர் மாதவ் சிங் சோலங்கி மறைவு -பிரதமர் மோடி இரங்கல் - குஜராத்

09.01.2021 07:25:15

குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மாதவ் சிங் சோலங்கி காலமானார்.

குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மாதவ் சிங் சோலங்கி (வயது 93). குஜராத் மாநிலத்தின் முதல்வராக 4 முறை பதவி பவித்தவர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரியாகவும் பதவி வகித்தார்.

இந்நிலையில் முதுமைசார்ந்த உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சோலங்கி இன்று காலை காலமானார். 

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மாதவ் சிங் சோலங்கியின் மறைவு தனக்கு கவலை அளிப்பதாகவும், சமுதாயத்திற்கு அவர் செய்த அளப்பரிய சேவைக்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.