கொரோனா தொற்று பரவல் குறித்து மோடி ஆலோசனை
13.07.2021 10:57:18
கொரோனா தொற்று பரவல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
காணொலி காட்சி மூலமாக நடைபெறவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் அஸாம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகாலயம், அருணாசல பிரதேசம், மிஸோரம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவல் குறைவடைந்து வருகின்ற நிலையில், வடக்கிழக்கு மாநிலங்களில் பரவல் வேகம் அதிகரித்து செல்கிறது.
இந்நிலையிலேயே ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.