காவி நிறத்தில் மாறிய தூர்தர்ஷன் லோகோ எதிர்க்கட்சியினர் கண்டனம்

20.04.2024 00:00:00

புதுடெல்லி: கடந்த 10 ஆண்டு பா.ஜ ஆட்சியில் வள்ளுவருக்கு காவி உடை, காவி உடை அணிய மறுத்து வெள்ளுடை அணிந்த வள்ளலாரை ஆர்எஸ்எஸ் பிரசாரகர் போல சித்தரிப்பது திருப்பூர் குமரனுக்கு விபூதி பூசுவது என காவி பிரச்சாரத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது பாஜ. இந்த வரிசையில் அரசுக்கு சொந்தமான தூர்தர்ஷன் செய்தி சானலின் லோகோவை காவி நிறத்தில் மாற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 16ம் தேதியில் இருந்து இந்த மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பான டிடி நியூஸ் தனது டிவிட்டர் பதிவில் , ‘‘ டிடி நியூஸ் சேனல் மதிப்பு எப்போதும் போல் தொடர்கிறது. ஆனால் ஒரு புதிய அவதாரத்தில் உள்ளது ’’ என பதிவிடப்பட்டுள்ளது. இது இந்தியாவை காவிமயமாக்கும் முயற்சி என்று எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.