இன்று வரவு செலவு கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது!

29.01.2021 07:51:16

நாடாளுமன்றத்தின் வரவு செலவு கூட்டத்தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையுடன் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து ஜனாதிபதி உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கூட்டத் தொடர் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. முதல் கட்டம்   இன்று ஆரம்பமாகின்ற நிலையில், பெப்ரவரி 15 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இரண்டாவது கட்டம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.