இன்று மேற்கு வங்கத்தில் ஏழாம் கட்ட தேர்தல் !

26.04.2021 10:47:01

 

மேற்கு வங்கத்தில் 34 தொகுதிகளுக்கான 7 ஆம் கட்ட தேர்தல்  இன்று (திங்கட்கிழமை) நடைப்பெறுகிறது.

மேற்கு வங்கத்திற்கு எட்டுக் கட்டங்கலாக தேர்தல் நடந்து வருகிறது. இதன்படி இன்று 34 தொகுதிளுக்கான 7 ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
இதில் 284 வேட்பாளர்கள் போட்டியிடுகுன்றனர்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெறும் தேர்தல் என்பதால் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.

அதேநேரம் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய பாதுகாப்பு படையினர்,  ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.